கலைப்புலி தாணு உடன் இணைந்து தனுஷ் தயாரித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'விஐபி-2' இம்மாதம் 11-ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவரும் படம் எது?
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படமாக இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. தனுஷ் நடித்துள்ள ஆங்கில படம்தான் அடுத்து வெளியாகவிருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் 'வட சென்னை' படத்தில் நடித்து வரும் தனுஷ், அத்துடன் ரஜினிகாந்த் நடிப்பில் 'காலா' படத்தை தயாரித்து வருகிறார்!
அடுத்து, ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா, இலியானா முதலானோர் நடித்து ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'பர்ஃபி'யை தமிழில் ரீ-மேக் செய்து நடிக்க இருக்கிறார் தனுஷ். இந்த படத்திற்கு 'டூயட்' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
பிரபு, மீனாட்சி சேஷாத்ரி நடிப்பில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1994-ல் வெளியான படம் 'டூயட்'. இந்தப் படத்தில்தான் பிரகாஷ்ராஜ் வில்லனாக அறிமுகமானார். ஏற்கனவே, 'படிக்காதவன்', 'வேலைக்காரன்' என ஏற்கனவே வெளியாகி வெற்றியடைந்த படங்களின் டைட்டில்களை தன்னுடைய படத்துக்கு சூட்டியவர்தான் தனுஷ்.
தனுஷ் நடிக்கும் படத்திற்கு இப்போது மற்றுமொரு பழைய பட டைட்டில் மீண்டும் தலைப்பாகியுள்ளது!
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment