Ads (728x90)

கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொக்குவில் அம்பாள் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 30 ஆம்திகதி கோப்பாய் பொலிஸார் மீது கொக்குவில் நந்தாவில் பகுதியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget