Ads (728x90)

தமிழ், சிங்­கள, முஸ்­லிம் மக்­க­ளுக்­குத் துளி­ய­ள­வே­னும் பாகு­பாடு காட்­டாத வகை­யி­லான அர­சி­யல் தீர்­வொன்றை இந்த நாடா­ளு­மன்­றத்­துக்­குள் அடை­ய­வேண்­டும் எனத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.
நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை அர­சி­யல் வாழ்­வில் 40 வரு­டங்­களை நிறைவு செய்த தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு வாழ்த்­து­க­ளைத் தெரி­விக்­கும் பிரே­ரணை மீதான விவா­தம் நடை­பெற்­றது. இந்­தப் பிரே­ர­ணைக்கு  நன்றி தெரி­வித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­டாறு  கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:எனது 40வரு­ட­கால நாடா­ளு­மன்ற சேவை­யைப் பாராட்டி சிறப்பு சபை அமர்­வைக் கூட்டி விவா­தம் நடத்­து­வ­தற்கு கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் முடி­வெ­டுக்­கப்­பட்­ட­தற்­கும், விவா­தத்­தில் பங்­கேற்று உரை­யாற்­றிய உறுப்­பி­னர்­க­ளுக்­கும் நன்­றி­க­ளைத் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.
தேர்­த­லில் போட்­டி­யி­டு­மாறு மறைந்த அரச தலை­வர் ஜெ.ஆர். ஜய­வர்­த­னவே எனக்கு ஆலா­சனை வழங்­கி­னார். இதற்­காக அவ­ருக்கு நான் கட­மைப்­பட்­டுள்­ளேன். அவ­ரி­ட­மி­ருந்து நிறைய அனு­ப­வங்­களை இளை­ஞ­ராக இருந்த காலத்­தில் எனக்­கும் – எனது சகாக்­க­ளுக்­கும் பெறக்­கூ­டி­ய­தாக இருந்­தது.
அதன்­பி­றகு முன்­னாள் அரச தலை­வர் ஆர்.பிரே­ம­தா­ஸ­வின் கீழும் செயற்­ப­டக்­கூ­டிய வாய்ப்­புக் கிடைத்­தது. இவ்­விரு தலை­வர்­க­ளி­ட­மி­ருந்­தும் பல விட­யங்­க­ளைக்  கற்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தன. அதற்­காக அவர்­க­ளுக்கு நன்­றி­க­ளைத் தெரி­விக்­கின்­றேன்.
எதிர்­வ­ரி­சை­யில் இருப்­ப­தை­யும் சகித்­துக்­கொண்­டோம். எதிர்­வ­ரி­சைக்­குச் செல்­வ­தென்­பது, வல­கம்­பாகு மன்­னன் காட்­டுக்­கு­போ­ன­து­போல் ஓர் அனு­ப­வ­மா­கும். அத­னால், எதி­ரணி எப்­படி என்­பது எமக்கு மட்­டுமே தெரி­யும்.
எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னும், அமைச்­சர் காமினி ஜய­விக்­ரம பெரே­ரா­வும் 40 ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே நாடா­ளு­மன்­றத்­துக்­குத் தெரி­வா­கி­னர்.
மூத்த உறுப்­பி­னர்­க­ளாக அவர்­கள் இரு­வ­ரும் இருக்­கின்­ற­னர். எனி­னும், என்­னை­போல் இந்த இரு­வ­ரும் தொடர்ச்­சி­யாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யில் அங்­கம் வகிக்­க­வில்லை.
கொள்கை அடிப்­ப­டை­யில் தனது கட்­சி­யு­டன் இணைந்து எதிர்க்­கட்­சித் தலை­வர் சம்­பந்­தன் பத­வி­யைத்  துறந்து  அன்று நாடா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து சென்­றார். இனப்­பி­ரச்­சி­னை­யைத் தீர்ப்­பது பற்­றிப் பேசப்­பட்­டது. இலங்கை – இந்­திய ஒப்­பந்­தம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட பின்­னர் அவர் மீண்­டும் நாடா­ளு­மன்­றம் வந்­தார். பயங்­க­ர­வா­தப் பிரச்­சினை கார­ண­மாக ஒரு தடவை அவர்­க­ளுக்­குப் போட்­டி­யிட வாய்ப்­ப­ளிக்­கப்­ப­ட­வில்லை.
அதே­போல் காமினி ஜய­விக்­ர­ம­பெ­ரேரா முத­ல­மைச்­ச­ராக தெரி­வா­கிச் சென்­றார். சிறந்த முத­ல­மைச்­ச­ரா­கச் செயற்­ப­டு­வது எப்­படி என்று காண்­பித்­தார். ஒரு­வர் கொள்­கைக்­கா­க­வும், மற்­றை­ய­வர் அபி­வி­ருத்­திக்­கா­க­வும் இந்த அவை­யில் இருந்து சென்­ற­னர்.
நாட்­டில் போர் முடி­வ­டைந்­து­விட்­டது. தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வும், பொரு­ளா­தா­ரப் பிரச்­சி­னைக்­கான தீர்­வும் எதிர்க்­கட்­சித் தலை­வர் சம்­பந்­தன் கூறி­ய­து­போல் ஒன்­று­ட­னொன்று தொடர்­பு­பட்­ட­தா­கவே இருக்­கின்­றது.எனவே, சிங்­க­ளம், தமிழ், முஸ்­லிம் என அனைத்து இன மக்­க­ளை­யும் ஒன்­றி­ணைத்­துக்­கொண்டு நாம் இலங்­கை­ய­ராக பய­ணிக்­க­வேண்­டும்.
அதற்­கு­ரிய அர்ப்­ப­ணிப்பை தேசிய அரசு செய்­துள்­ளது. எந்­த­வொரு குடி­ம­க­னுக்­கும் துளி­ய­ள­வே­னும் பாகு­பாடு இல்­லாத வகை­யி­லான அர­சி­யல் தீர்­வொன்றை இந்த நாடா­ளு­மன்­றத்­துக்­குள் அடை­ய­வேண்­டும்.
அதே­போல் இரு முதன்­மைக் கட்­சி­க­ளும் அர­சில் இருக்­கின்­றன. எனவே, பின்­நோக்­கிப் பாராது – துணி­வு­டன்  பொரு­ளா­தார வளர்ச்­சியை அதி­க­ரித்து நாட்­டின் நிலை­யா­ன­தொரு – வளர்ச்­சி­மிகு அபி­வி­ருத்­திக்கு அடித்­த­ள­மி­ட­வேண்­டும். இவை அனைத்­தை­யும் செய்­வ­தற்­கான கேந்­திர நிலை­ய­மாக நாடா­ளு­மன்­றத்­தைப் பயன்­ப­டுத்­த­வேண்­டும்- என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget