Ads (728x90)

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனுக்கும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்வ­ர­ னுக்­கும் இடை­யே­யான சந்­திப்பு யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள முத­ல­மைச்­ச ­ரின் இல்­லத்­தில் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு இடம்­பெறவுள்ளது.
இந்­தச் சந்­திப்­பில் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளும் பங்­கேற்­பர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.
தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்­கும் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்­கும் இடையே கடந்த மாதம் கொழும்­பில் இடம்­பெற்ற சந்­திப்­பில் இணக்­கம் காணப்­பட்­ட­தற்கு அமை­வாக இன்­றைய தினம் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளு­டன் இணைந்து இந்­தச் சந்­திப்பு இடம்­பெ­று­கி­றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget