Ads (728x90)

நாட்­டில் வாழும் ஏனைய மக்­க­ளும் இந்த நாட்டுக்கு உரித்­து­டைய மக்­கள். இந்த நாடு அவர்­கள் அனை­வ­ருக்­கும் சொந்­த­மா­னது என்று நினைத்து ஆட்சி நடத்­தி­னால் நிலமை வேறு­வி­த­மாக அமை­யும்.
இந்­தப் பணியை முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வும் நானும் இணைந்து நாட்டு மக்­க­ளுக்­காக நிறை­வேற்ற வேண்­டும் என்று விரும்­பு­கின்­றேன்.
இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.
தமிழ் வினைச்­சொற்­களை விவ­ரித்­தல் என்ற தலைப்­பில் ஜுலம்­பிட்­டியே மங்­கள தேர­ரி­னால் எழு­தப்­பட்ட புத்­த­கம் மேல்­மா­காண காலா­சார சதுக்­கத்­தில் நேற்று வெளி­யி­டப்­பட்­டது.
இந்த நிழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
வினைச்­சொற்­கள் விவ­ரித்­தல் என்ற பெய­ரில் தேர­ரி­னால் வெளி­யி­டப்­பட்­டுள்ள புத்­த­கம் தமிழ். சிங்­கள மக்­க­ளுக்­கான உற­வுப்­பா­ல­மாக அமை­யும். பெரும்­பான்மை சிங்­கள மக்­க­ளுக்­கும் தமிழ் மக்­க­ளுக்­கும் இடை­யில் இந்­தப் புத்­த­கம் ஓர் உறவை ஏற்­ப­டுத்­தும்.
நாடு சுதந்­தி­ரம் அடைந்த பின்­னர் யாழ்ப்­பா­ணத்­தில் பிக்­கு­மார்­கள் பாட­சா­லை­க­ளுக்கு சென்று சிங்­க­ளம் கற்­பித்­தார்­கள். தமிழ் மாண­வர்­க­ளும் ஆர்­வத்­து­டன் கற்­றார்­கள். ஆனால் அர­சின் மொழிக்­கொள்கை அர­சி­யல் நோக்­கத்­தின் அடிப்­ப­டை­யில் மாற்­ற­ம­டைந்த கார­ணத்­தி­னால் துன்­பி­யல் நிகழ்­வாக சிங்­கள மொழி கற்­பிக்­கும் செயற்­பா­டு­கள் தடைப்­பட்டு போயின.
அந்த திட­மான முயற்சி முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தால் தமி­ழர்­கள் சிங்­க­ளத்­தை­யும் சிங்­க­ள­வர்­கள் தமி­ழை­யும் கற்­றி­ருப்­பார்­கள். அந்த நிலை தொடர்ந்­தி­ருந்­தால் இந்த நாட்­டில் ஏற்­பட்ட பல பிரச்­சி­னை­கள் இடம்­பெற்­றி­ருக்­கா­மல் போயி­ருக்­கும். அது நடை­பெ­ற­வில்லை.
வடக்கு கிழக்­கில் பல அழிந்த பௌத்த விகா­ரை­க­ளில் தமிழ் எழுத்­துக்­கள் பொறிக்­கப்­பட்­டுள்­ளன. ஒரு கால­கட்­டத்­தில் தமிழ் பௌத்­தர்­கள் இருந்­தார்­கள். எனவே பௌத்­தம் இரு­வ­ருக்­கும் பொது­வா­னது.
அப்­ப­டி­யி­ருந்­தால் எம்­மத்­தி­யில் ஏற்­பட்­டுள்ள குரோ­தங்­களை இல­கு­வாக நாம் நீக்­கி­கொள்ள முடி­யும். நாம் அனை­வ­ரும் ஒரே நாட்டு மக்­கள். இந்த நாட்­டின் எதிர்­கா­லம் ஒற்­று­மை­யி­லேயே தங்­கி­யுள்­ளது. சிங்­கப்­பூர் போன்ற நாடு­கள் எமது நாட்டை முன்­னு­தா­ர­ன­மாக கொண்­டு­தான் வளர்ச்­சி­பெற்­றன.
இன்று சிங்­கப்­பூர் எங்­குள்­ளது நாம் எங்கே உள்­ளோம். சிங்­கப்­பூர் மக்­கள் நாளாந்­தம் எமது நாட்­டினை விட­வும் 50 வீதம் அதி­க­மாக உழைக்­கின்­றார்­கள். இவ்­வி­த­மான பின்­ன­ணி­க­ளுக்கு எமது கொள்­கை­களே கார­ண­மா­கும். கொள்­கை­க­ளில் மாற்­றம் செய்­ய­வேண்­டும்.
இந்த நாட்­டில் வாழும் ஏனைய மக்­க­ளும் இந்த நாட்­டிற்கு உரித்­து­டைய மக்­கள். இந்த நாடு அவர்­கள் அனை­வ­ருக்­கும் சொந்­த­மா­னது என்று ஆட்­சி­ந­டத்­தி­னால் நிலமை வேறு­வி­த­மாக அமை­யும்.
இந்­தப் பணியை முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வும் நானும் இணைந்து நாட்டு மக்­க­ளுக்­காக நிறை­வேற்ற வேண்­டும் என்று விரும்­பு­கின்­றேன். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்­றும் முஸ்­லிம் அர­சி­யல் தலை­வர்­கள் என்று நாட்­டிற்­கான ஒரு பொதுப்­பா­தையை கொடுக்க வேண்­டும்.
நாட்டு மக்­கள் மதிப்­பு­டன் சமத்­து­வ­ட­னும் சம உரி­மை­க­ளு­ட­னும் வாழ வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும். இந்த நாடு பிரி­ப­டக்­கூ­டாது. இந்த நாடு ஒரு­மித்த ஒற்­று­மை­யான ஒரே நாடாக எப்­பொ­ழு­தும் இருக்க வேண்­டும். இந்த நாட்­டிற்கு எவ்­வி­த­மான குந்­த­க­மும் ஏற்­ப­ட­வும்­கூ­டாது.
இத­னைப் பிரிப்­ப­தற்கு நாங்­கள் எல்­லோ­ருமே எதிர்ப்­பு­தான். அத­னால் பிரி­வினை வாதம் ஏற்­ப­டு­வதை நாங்­கள் எதிர்­கின்­றோம். நாம் ஒற்­று­மை­யாக ஒரு­மித்து நாட்டை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டும் – -என்­றார்.
நிகழ்­வில் உரை­யாற்­றிய மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­த­தா­வது,
எமது பாட­சா­லைக் காலத்­தில் சிங்­கள – தமிழ் மாண­வர்­கள் ஒன்­றா­கக் கல்வி கற்­கும் சூழல் இருந்­தது. குறு­கிய அர­சி­யல் நோக்­கத்தை கொண்­ட­வர்­கள், இந்த ஒற்­று­மையை – அன்­னி­யோன்­யத்தை கெடுத்­து­விட்­டார்­கள்.
போர் என்­னால் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தால்­தான், சம்­பந்­தன் இன்று என்­னு­டன் ஒரே மேடை­யில் இருக்­கின்­றார்த போர் முடி­வுக்கு வந்­த­தும் நல்­லி­ணக்­கம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டது.
போர் நடந்­த­போது அதனை ஏற்­ப­டுத்த முடி­யாது. இன்று நல்­லி­ணக்­கம் என்ற பெய­ரில் நாட்­டைப் பிரிக்க ஏற்­பாடு நடக்­கின்­றது. நாட்டை இணைப்­ப­தற்­கான முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.
சிறு­பான்­மை­யி­னர், பெரும்­பான்­மை­யி­னர் என்று பிரிப்­ப­தற்கு நான் விரும்­ப­வில்லை. நாங்­கள் ஒரே நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள். எம்­மி­டையே கோபம், பிரி­வி­னை­வா­தம், வைராக்­கி­யம் என்­ப­வற்றை ஏற்­ப­டுத்த முனைந்­தால் அது அர­சி­யல் நோக்­கத்­திற்­கா­கவே அன்றி மக்­க­ளின் தேவைக்­காக அல்ல.
நாங்­கள் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரா­கப் போர் செய்­ய­வில்லை. கொடூர பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக 30 வரு­டம் போர் புரிந்­தோம். மூன்று வரு­டங்­க­ளிற்­குள் போரை நிறை­வுக்கு கொண்­டு­வந்­தோம்.
இன்று அதன் பிர­தி­ப­ல­னாக சுதந்­தி­ர­மான சுற்­றித்­தி­ரி­யும் சந்­தர்ப்­பம் ஏற்­பட்­டுள்­ளது. எனக்கு அவ்­வாறு செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.
மேற்­கு­லக நாடு­க­ளுக்கு நான் சென்­றால் வெவ்­வேறு விட­யங்­க­ளுக்­காக என்னை நீதி­மன்­றத்­திற்கு கொண்­டு­செல்ல முயற்­சிக்­கின்­ற­னர். நான் அரச தலை­வ­ராக இருந்­த­கா­லத்­தில் பொது­ந­ல­வாய மாநாட்­டுக்­குச் சென்­ற­போது ஆஸ்­தி­ரே­லி­யா­வில் தங்­க­ளது உற­வு­களை இழந்­த­வர்­கள் இணைந்து எனக்­கெ­தி­ராக முறைப்­பாடு செய்து கைது செய்­வ­தற்கு முயற்­சித்­த­னர்.
நான் பிரிட்­டன் சென்­ற­போது எனது அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்­கல் செய்ய முயற்­சிக்­கப்­பட்­டது. நான் அமெ­ரிக்­கா­வுக்கு சென்­ற­போது எனக்­கெ­தி­ராக நீதி­மன்­றம் சென்­றார்­கள். இது­கு­றித்து நாங்­கள் அப்­போது பெரி­தாக பேச­வில்லை – என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget