யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தற்போது தீர்ப்பை வாசிக்கின்றார்.அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நடவடிக்கை சுவிஸ்குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை தப்பிக்க வைக்கும் முதலாவது நடவடிக்கை.
9ஆம் எதிரியைப் பொலிஸாரிடம ஒப்படைக்கவோ, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவோ நாடாளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை நீதிமன்றில் சாட்சியமாகத் தெரிவித்தது 9ஆம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார்.
பொதுமக்களிடம் ம.சசிக்குமாரை அவிழ்த்து விடுமாறு கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சசிக்குமாரின் உறவினர்கள் வந்து அவரை அழைத்துச் செல்லும் வரை சுமார் 2 மணி நேரம் இரவு 11 மணியில் இருந்து 1 மணி வரை வீதியில் காத்திருந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தச் செயல் ம.சசிக்குமாரை தப்பிக்க வைக்கும் முதலாவது நடவடிக்கை.
இரண்டாவது நடவடிக்கை
ம.சசிக்குமரைத் தப்பிக்க வைக்கும் நடவடிக்கை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜனின் நடவடிக்கை.என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
Post a Comment