
ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தோள்பட்டையில் காயம் அடைந்ததை அடுத்து, இந்திய அணியுடன் நடந்து வரும் டி20 போட்டித் தொடரில் இருந்து விலகியுள்ளார். 5வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால், ராஞ்சியில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் அவர் களமிறங்காததுடன், தொடரில் இருந்தும் விலகினார்.
சிகிச்சைக்காக நாடு திரும்பும் அவர், இங்கிலாந்து அணியுடன் நடக்க உள்ள ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகி விடுவார் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆஸி. அணி டேவிட் வார்னர் தலைமையில் டி20 தொடரை எதிர்கொள்கிறது. ஸ்மித்துக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
Post a Comment