Ads (728x90)

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் அரை இறுதியில் இந்திய அணி 0- 1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் வீழ்ந்து ஏமாற்றம் அளித்தது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா - அர்ஜென்டினா அணிகள் மோதின.

முதல் கால் பகுதியில் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 2-வது கால் பகுதி தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணியின் வீரர் பில்லட் கோன்ஸலா கோல் அடித்தார். இதனால் 2-வது கால் பகுதியின் முடிவில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை வகித்தது.

3-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் 4-வது கால் பகுதியில் இந்திய வீரர்கள் தாக்குதல் ஆட்டம் தொடுத்தனர். ஆனால் அர்ஜென்டினா வீரர்களின் தடுப்பாட்டத்தை மீறி கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. முடிவில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தோல்வியடைந்த இந்திய அணி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாட உள்ளது.

முன்னதாக நடைபெற்ற 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் நெதர்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. அந்த அணித் தரப்பில் மிர்ஸ்கோ 42-வது நிமிடத்தில் பீல்டு கோல் அடித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget