
2017ம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளது. 2018ம் ஆண்டின் முதல் சிறப்பு நாளான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பல படங்கள் வெளியாக உள்ளது. 2017ம் ஆண்டைப் பொறுத்த வரையில், தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் பெரிய வெற்றி, வசூல் என்று சொன்னால் 'மெர்சல்' படத்தை மட்டுமே சொல்ல முடியும்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'சி 3, விவேகம், விஐபி 2, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஸ்பைடர்' உள்ளிட்ட சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியையும், வசூலையும் குவிக்கவில்லை. இந்தப் படங்கள் மூலம் சுமார் 100 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.
2018-ம் ஆண்டிலும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் பல படங்கள் வெளியாக உள்ளன.
ரஜினிகாந்தின் '2.0', கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2', அஜித்தின் 'விஸ்வாசம்', விஜய் நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் படம், சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம், செல்வராகவன்' படம், விக்ரம் நடிக்கும் 'ஸ்கெட்ச், துருவ நட்சத்திரம்', தனுஷ் நடிக்கும், 'வட சென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி 2,', சிம்பு நடிக்கும் மணிரத்னம் படம், விஜய் சேதுபதி நடிக்கும் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சூப்பர் டீலக்ஸ், 96, ஜுங்கா,', சிவகார்த்திகேயன் நடிக்கும் பொன்ராம் படம், கார்த்தி நடிக்கும் பாண்டிராஜ் படம், விஷால் நடிக்கும் 'இரும்புத் திரை, சண்டக் கோழி 2', ஜெயம் ரவி நடிக்கும், 'டிக் டிக் டிக், அடங்க மறு', ஆர்யா நடிக்கும் 'கஜினிகாந்த்', அதர்வா நடிக்கும் 'இமைக்கா நொடிகள், பிரபுதேவா நடிக்கும் 'குலேபகாவலி, மெர்க்குரி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2,' என பல படங்கள் வெளியாக உள்ளன.
அனேகமாக, 2018ம் ஆண்டின் அனைத்து முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாக வாய்ப்புகள் அதிகம்.
Post a Comment