
மேலும், ஹலோ படத்தை பிரமாண்ட படமாக்கி விடவேண்டும் என்பதற்காக, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் விளம்பரப்படுத்தினர். அப்போது மேடைகளில் தோன்றி நடனமாடினார் அகில். அதோடு நடிகர் ராணாவும் ஹலோ படத்தின் விளம்பரங்களில் கலந்து கொண்டார். டிசம்பர் 22-ந்தேதி வெளியான இந்த படம் பெரிய வசூலை கொடுத்துள்ளது.
அதனால் உற்சாகமடைந்துள்ள அகில், ஹலோ படம் எனது வாழ்க் கையையே மாற்றி விட்டது. இந்த உற்சாகத்தோடு அடுத்த படத்தில் நடிக்க தயாராகி விட்டேன். நான் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ஜனவரி 10ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment