15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற 14ந் தேதி முதல் 21ந் தேதி வரை நடக்கிறது. சென்னையில் உள்ள தேவி, தேவிபாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர். ரஷிய கலாச்சார மையம் ஆகியவற்றில் இந்த விழா நடக்கிறது.சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது. சர்வதேச திரைப்பட இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான போட்டிக்கு 12 படங்கள் தேர்வாகி உள்ளது. நயன்தாரா நடித்த அறம், ஜோதிகா நடித்த மகளிர் மட்டும், ஆண்ட்ரியா நடித்த தரமணி, பாரதிராஜா நடித்த குரங்கு பொம்மை, இதுதவிர 8 தோட்டாக்கள், மாநகரம், மனுசங்கடா, ஒரு கிடாயின் கருணை மனு, துப்பறிவாளன், விக்ரம் வேதா படங்கள் இந்த ஆண்டு போட்டிப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. நயன்தாரா நடித்துள்ள அறம் படம் சிறந்த படமாக தேர்வாகும் வாய்ப்புள்ளதாக திரையுலக பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
Post a Comment