
சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன், தற்போது கமல்ஹாசனுடன் நடிக்கும் சபாஷ் நாயுடு படம் மட்டுமே கைவசம் வைத்துள்ளார். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனது லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கார்சோலை தனது தாயார் சரிகாவுக்கு அறிமுகம் செய்த ஸ்ருதிஹாசன், சமீபத்தில் சென்னையில் நடந்த ஆதவ் கண்ணதாசன் திருமண விழாவில் தனது தந்தை கமலுக்கு அறிமுகம் செய்துள்ளார். அந்த திருமண விழாவில் ஸ்ருதிஹாசன் புடவையிலும், மைக்கேல் கார்சோல் வேஷ்டி அணிந்தும் பங்கேற்றனர்.
தற்போது ஸ்ருதிஹாசனுக்கு 31 வயது ஆகும் நிலையில், அடுத்த ஆண்டு அவருக்கும், மைக்கேல் கார்சோலுக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment