Ads (728x90)

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலிக்கும், பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இன்னும் சில தினங்களில் இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள விராட் கோலியின் சார்பில் அவருடைய நெருங்கிய நண்பர்களான சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் ஆகிய இருவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அனுஷ்கா சர்மா தரப்பில், ஷாரூக்கான், ஆமீர்கான், தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ரா, இயக்குனர் மனீஷ் சர்மா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

இந்தத் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்துவிட்டதாம். இருவரது நெருங்கிய குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளார்களாம்.

மும்பையில் வரும் 21 அல்லது 22ம் தேதி பிரம்மாண்டமான திருமண வரவேற்பு இருக்கும் என்கிறார்கள். அதில் பல பாலிவுட் பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இந்திய அணி, இலங்கை கிரிக்கெட் அணியுடன் மோதும் கடைசி டி20 போட்டி டிசம்பர் 24ம் தேதி நடைபெற இருப்பதால், அதற்குப் பிறகு திருமண வரவேற்பு நடக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

பாலிவுட்டில் இந்தத் திருமண விவகாரம் பற்றித்தான் தற்போது பரபரப்பாக உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget