
வடக்கு- –கிழக்கில் பல்கலைக்கழகங்களில் நிலவு கின்ற வெற்றிடங்களுக்கும் வீதி அபி விருத்தி அதிகார சபையில் நிலவும் வெற்றிடங்களுக்கும் வடக்கு -– கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கும் பெயர்ப்பட்டியலின் ஊடாக ஆள்சேர்ப்புச் செய்யப்படும்.
இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரி யெல்ல சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுச் சனிக்கிழமை அமைச்சு அறிவிப்பு நேரத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
வரவு -– செலவுத் திட்ட விவாதங்களின்போது அரச நிறுவனங் களுக்கு வெற்றிடங்களை நிரப்பும் போது வடக்கு -– கிழக்கில் உள்ளவர்களுக்கு அநீதி இழைக் கப்படுவதாகவும் வடக்கு – கிழக்குக்கு வெளியே உள்ளவர்களை வெற்றிடங்களுக்கு நிரப்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையின் அவதானத்திற்குக் கொண்டு வந்தனர்.
இந்த விடயம் தொடர்பாக நான் ஆராய்ந்தேன். எதிர்வரும் காலங்களில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் கீழ் உள்ள பல்கலைகழகங்களில் நிறைவேற்று அல்லாத கல்வி சாரா பீடங்களுக்கும் வீதி அதிகார சபைக்கும் ஆள்சேர்ப்பு செய்யும்போது வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கும் பெயர்ப் பட்டியல்படி நியமனங்கள் வழங்கப்படும்.
யாழ்ப்பாணப் பல்கலைகழகம் மற்றும் அதனுடன் இணைந்த கிளிநொச்சி வளாகம் மற்றும் வவுனியா வளாகத்துக்கும், கிழக்கு பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைந்த திருகோணமலை வளாகம், சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கை நிறுவனம், தென்கிழக்கு பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களில் நிலவுகின்ற வெற்றிடங்களுக்கும் வீதி அதிகார சபையில் நிலவும் வெற்றிடங்களுக்கும் இந்த வகையில் ஆள்சேர்ப்பு செய்யப்படும். அப்போது வடக்கு-கிழக்கில் உள்ளவர்களுக்கு அநீதி ஏற்படாது – என்றார்.
Post a Comment