பன்னாட்டு மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று கவனவீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பன்னாட்டு விசாரணையை வலிறுத்தி இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
வட மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், ” பன்னாடே எங்கள் பிரச்சினையைக் கையாள முன்வாருங்கள்” என்ற, தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி, அங்கியிருந்து யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா சபை இணைப்பு அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.
கிழக்கு மாகாணத்தில் கல்லடி பாலத்தில் ஆரம்பமாகிய ஊர்வலம் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் இடம்பெற்றது.
அதில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 700 க்கும் மேற்பட்ட உறவுகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment