புதிய அரசமைப்புத் தொடர்பாக மக்கள் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னர் வடக்கிலிருந்த முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் அந்தந்தப் பகுதிகளில் மீண்டும் குடியமர்த்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர.பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் வெளிச்சம் அமைப்பினரால் கொழும்பு தேசிய நூலகச் சாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
‘‘அரச வரவு– செலவுத் திட்டமொன்றுக்கு ஆதரவளிக்கும் உலகின் ஒரேயொரு எதிர்க்கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகத்தான் இருக்கும். அவர்கள் பிரிந்து சென்று தனிநாடொன்றை நிறுவ முயற்சிப்பதற்கு அரசு துணை நிற்பதை அனுமதிக்க முடியாது. தற்போதைய அரசு நாட்டையும், நாட்டு மக்களையும் காட்டிக் கொடுக்கின்றது.மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அமைதியாகக் காணப்பட்ட வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தற்போதைய அரசு ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியதன் பின்னர், நிறைய விடயங்களை செய்துகொள்கிறார்’’- என்றார்.
Post a Comment