உலக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்டிங்கில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 2-வது இடத்தில் இருக்கிறார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உலக டெஸ்ட் வீரர்களின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் விராட் கோலி தொடர்ந்து 2-ம் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். அவர் 947 புள்ளிகளைப் பெற்றுள்ளார். ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடி வருவதன் மூலம் தனது புள்ளிக்கணக்கை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் முதலிடத்தையும் அவர் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 893 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். மற்றொரு இந்திய வீரர் புஜாரா 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலாஸ்டயர் குக் 8-வது இடத்துக்கு வந்துள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்ஸ் ஆகியோர் சம புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 6-வது இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா 776 புள்ளிகளுடன் 7-வது இடத்தைப் பெற்றுள்ளார். பாகிஸ்தான் வீரர் அஸார் அலி 9-வது இடத்திலும், இலங்கை வீரர் தினேஷ் சந்திமல் 10-வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தில் உள்ளார். அவர் 892 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் வங்கதேச ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய வீரர் அஸ்வின் 3-வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 4-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ரங்கனா ஹெராத் 6-வது இடத்திலும் உள்ளனர்
Post a Comment