யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களுக்குத் தடையின்றிச் செல்வதற்காக உதவித் தேர்தல் ஆணையாளரால் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.அடையாள அட்டையில் வேட்பாளரின் புகைப்படம், தேசிய அடையாள அட்டை இலக்கம், கட்சி, வாக்களிப்பு நிலையம் போன்ற விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தற்போது இந்த அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்த ஏனைய கட்சி வேட்பாளர்களுக்கும் உதவித் தேர்தல் ஆணையாளரால் அட்டைகள் வழங்கப்படவுள்ளன.
Post a Comment