Ads (728x90)

மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை எப்போது விவாதத்திற்கு எடுக்கப்படும் என்பதை ஆராய மீண்டும் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம் பாராளுமன்றத்தில் கூடுகின்றது. அறிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இறுவெட்டின் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு ஊழல் விவகாரம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு தயாரித்த அறிக்கை பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அறிக்கை குறித்து இன்னும் விவாதத்திற்கு எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை குறித்த விவாதம் எப்போது நடத்தபடுவது என்ற உறுதியான திகதியொன்றை தீர்மானிக்கும் வகையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை கூடவுள்ளது. பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடும் இந்தக் கூட்டத்தில் தேர்தலின் பின்னர் விவாதிக்கும் சாத்தியப்பாடுகள் குறித்தும் ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget