நாட்டின் நிதித்துறையை கையாளும் நிர்வகிக்கும் அதிகாரம் இனியும் ஐ.தே.க. வசம் இருக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கேகாலையில், அரசியல் கூட்டமொன்றில் நேற்று (20) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஐ.தே.க. வசம் வழங்கியிருந்தேன். ஆனால், இனி அந்தப் பொறுப்பை நானே ஏற்றுக்கொள்ளவிருக்கிறேன்.
பிரதமர் வசமிருக்கும் அந்தப் பொறுப்பை எனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவிருக்கிறேன். எனது தலைமையிலான ஒரு விசேட சபையே நாட்டின் நிதித் துறையை இனிமேல் கையாளும்.
“மூன்று மாதங்களுக்கு முன்பாகவே அந்தச் சபை அமைக்கப்பட்டுவிட்டது. உள்ளூராட்சித் தேர்தல் நிறைவடைந்ததும் ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் எனது பயணம் ஆரம்பமாகும். எனது பயணத்தில், நாட்டு மக்கள், கல்விமான்கள், சமயத் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைத்துக்கொள்ளப்படுவர்.”
இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.
Post a Comment