Ads (728x90)

அமெரிக்காவில் நடைபெற்ற ‘யோகத்தான்’ எனும் யோகா நிகழ்ச்சியில் 11 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். எம்.பிக்கள், ஆளுநர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

யோகாவை பிரபலப்படுத்தும் முயற்சியாக சர்வதேச யோக தினம் கடைபிடிக்கப்பட்ட பின், உலக அளவில் யோகா பிரபலமடைந்து வருகிறது. அமெரிக்காவில் அதிகஅளவில் யோகா நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்து சங்க் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அமெரிக்காவின் பல பகுதிகளில் நடைபெற்றன.

பல இடங்களில் நடந்த இந்த யோகத்தான் யோகா நிகழ்ச்சியில் 11254 பேர் கலந்து கொண்டனர். உடல் நலம் மற்றும் மனநலத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் அமெரிக்க எம்.பிக்கள், மாகாண ஆளுநர்கள், மாநகராட்சி மேயர்கள் என ஏராளமான மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். உடல் நலம் குறித்து ஆலோசனை குறிப்புகளை பயிற்சியாளர்கள் அளித்தனர்.

எளிமையான மூச்சு பயிற்சி, சூரிய நமஸ்கார் போன்ற எளிய உடற்பயிற்சிகளும் நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதில் அமெரிக்க மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு யோகா பயிற்சி முகாம்கள் நடத்தவும் அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget