சிரியாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வான்வழித் தாக்குதல் நடந்து வருகிறது. இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.இதுகுறித்து சிரிய கண்காணிப்பு குழு கூறும்போது, "சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியான கவுடாவில் கடந்த ஐந்து நாட்களாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 90க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். வியாழக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் 48 பேர் பலியாகினர்" என்று கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தொடர்ந்து சிரியயாவில் நடக்கும் வன்முறைகளை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றன. ஆனால், பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசோ ஏழு வருடங்களாக நடக்கும் இந்த வன்முறை தாக்குதலுக்கு மவுனம் காத்து வருகிறது.
தொடர் வான்வழித் தாக்குதலால் பலர் அருகிலுள்ள பள்ளிகளில் (அங்கும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது) நடத்தப்படுகிறது. இதுகுறித்து அங்கு தங்கியுள்ள உம் அம்தோ என்பவர் கூறும்போது, ”நாங்கள் 14 பெண்கள் இங்கு தங்கி இருக்கிறோம். இங்கு கழிப்பறைகள் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. நாங்கள் துன்பத்தில் இருக்கிறோம்” என்றார்.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யாவும் அவ்வப்போது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த மோதலில் 4,00,000 பேர் பலியாகியுள்ளனர்.
Post a Comment