Ads (728x90)

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் எதிர்வரும் வாரம் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் எதிர்வரும் தினங்களில் இடம்பெறவுள்ளதாக, ஆணைக்குழுவின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
இதனிடையே, உள்ளாட்சி மன்றங்களுக்கு இந்த முறை அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதால், உள்ளாட்சி மன்றங்களில் கூட்டங்களை நடத்தும்போது இடவசதிகள் தொடர்பான பிரச்சினை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இதனை தெரிவித்துள்ளார். சில பிரதேச சபைகளில் குறுகிய எண்ணிக்கையிலானவர்களே ஒன்றுகூடுவதற்கான நிலைமை உள்ளது.
எனவே, அத்தகைய உள்ளுராட்சி அதிகார சபைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் என ரோஹன ஹெட்டியாரச்சி வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget