Ads (728x90)

அதிவேக நெடுஞ்சாலையில் வாகன வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள வேக அளவீட்டு இயந்திரக்கட்டமைப்பு இன்று முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் வருடாந்தம் இடம்பெறும் விபத்துக்களில் 27சதவீதமானவை அதிக வேகத்தினால் இடம்பெறும் விபத்துக்களாகும். இதை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டமைப்பு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் பிரிவினால் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த இயந்திர கட்டமைப்பின் மூலம் வாகனத்தின் வேகத்தை கண்காணிப்பதுடன் வேக வரையறையை மீறும் வாகனங்களின் புகைப்படங்களை உடனடியாக ரெப் கணனியின் ஊடாக பிரதிபண்ணப்படும். மேலும் வாகன இலக்கம் , கண்காணிக்கப்பட்ட நேரம், அதிவேகம் தொடர்பான தகவல்களும் அச்சிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget