ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற குழு இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது.நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுடன் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற கலந்துரையாடல்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதை தடுப்பதே பிரதான இலக்காக அமைய வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
Post a Comment