Ads (728x90)

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி நேற்றுக் காலமானதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

54 வயதான உனா மக்கோலி சுகயீனம் காரணமாக மருத்துவ விடுப்பில் சென்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவரின் மறைவினால் ஐக்கிய நாடுகள் அமைப்பு துயரம் அனுஷ்டிப்பதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த மறைவு தொடர்பில் அனுதாபம் தெரிவித்து கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget