உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை நடத்தும் டவுன் டு எர்த் என்ற பத்திரக்கை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதில், உலகின் 200 நகரங்கள் கடுமையான குடிநீர் பஞ்சத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. இவற்றில் முதல் 10 அபாய நகரங்களில் பட்டியலில் பெங்களூருவும் இடம் பெற்றுள்ளது.
குடிநீர் பஞ்சத்தை நோக்கி வேகமாக செல்லும் டாப் 10 மெட்ரோ நகரங்களில் காபூல் (ஆப்கானிஸ்தான்), கராச்சி (பாகிஸ்தான்), இஸ்தான்புல்(துருக்கி), மெக்சிகோ (மெக்சிகோ), நைரோபி (கென்யா), கேப் டவுன் (தென்னாப்பிரிக்கா), பெங்களூரு (இந்தியா), பீஜிங் (சீனா), சானா (ஏமன்), சாவோ பாலோ (பிரேசில்) ஆகியன இடம்பெற்றுள்ளன.
முதல் 200 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் புனே நகரமும் இடம் பெற்றுள்ளது. இந்நகரமும் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி செல்வதால், கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
Post a Comment