ரஷ்ய அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் 76 சதவீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் 4-வது முறையாக அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் உட்பட 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 11 கோடி பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். இதில் 7 கோடியே 34 லட்சத்து 32 ஆயிரத்து 312 பேர் வாக்குரிமையை செலுத்தினர். அதாவது 67.49 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் நள்ளிரவில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அதிபர் விளாடிமிர் புதின் 76.66 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் வேட்பாளர் பவெல் குருடினினுக்கு 11.80 சதவீத வாக்குகள் கிடைத்தன. லிபரல் டெமாக்ரடிக் கட்சி வேட்பாளர் விளாடிமிர் சிரினோவ்ஸ்கிக்கு 5.66 சதவீத வாக்குகளும், தொலைக்காட்சி அறிவிப்பாளர் செனியா சோப்சக்கிற்கு 1.6 சதவீத வாக்குகளும் கிடைத்தன. இதர வேட்பாளர்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றனர்.
Post a Comment