Ads (728x90)

போட் சிற்றி திட்டத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பை அளவீடு செய்யும் பணியை நில அளவை திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட பகுதியை வரை படத்திற்குட்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் கையளிக்கப்படும் என்று நில அளவையாளர் பி.எம்.பி. உதயகாந்த தெரிவித்தார்.

இது குறித்து நில அளவையாளர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நிலப்பரப்பை சட்டரீதியாக்கும் பொருட்டு அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இந்த பணிகளை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார் .

போட் சிற்றி திட்டத்திற்கு அமைவாக கொழும்பு நகரம் இரண்டு தசம் ஆறு-ஒன்பது கிலோமீற்றர் பரப்பளவை கொண்டுள்ளதாக நில அளவையாளர் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget