பிருத்விராஜ் நடிக்கும் '9 அக நைன்' படத்தின் படப்பிடிப்பு கோட்டயம் அருகில் உள்ள ராமாபுரம் பகுதியில் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. ஆகஸ்ட் சினிமாஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து பிரிந்த பிருத்விராஜ் தனியாக சொந்தமாக புதிய நிறுவனம் தொடங்கில் அதில் தயாரிக்கும் முதல் படம் தான் இது. ஒன்பது நாட்களில் நடக்கும் சம்பவங்களை கொண்டு இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.இதில் பிருத்விராஜ் விஞ்ஞானியாக நடிக்கிறாராம். சயின்ஸ் பிக்சன் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தை ஜென்யூஸ் முகமது.. என்பவர் இயக்குகிறார். இவர்தான் துல்கர் சல்மான்-நித்யா மேனன் நடித்த '100 டேய்ஸ் ஆப் லவ்' என்கிற படத்தை இயக்கியவர் இதில் கதாநாயகிகளாக நித்யா மேனன் மற்றும் பார்வதி ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது
Post a Comment