இலங்கைக்கு விஜயம்செய்துள்ள பசுமை காலநிலை நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹோவார்ட் பென்சே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
பேண்தகு நில முகாமைத்துவம் தொடர்பில் மத்திய மலைநாட்டில் நீரின் ஓட்டம், நக்கிள்ஸ் மலைத்தொடர் மீதான காலநிலை மாற்ற தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காக ஹோவார்ட் பென்சே உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அது தொடர்பான விபரங்களை அவர் ஜனாதிபதிக்கு விளக்கினார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் காலநிலை மாற்றத்திற்கு மத்தியிலும் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளுக்கு நிதி ஏற்பாடுகளை வழங்கும் பல்தரப்பு நிதியத்தை சேகரிப்பதற்காக செயற்பட்டு வரும் நிறுவனம் பசுமை காலநிலை நிதியம் ஆகும்.
பசுமை காலநிலை நிதியத்தினால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் காபன் வாயு நுகர்வை குறைப்பதற்கும் காலநிலை மாற்றத்திற்கு மத்தியிலும் பரிமாற்றத்திற்குத் தேவையான உதவியையும் வழங்குகிறது.
மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்கவும் இங்கு பிரசன்னமாகியிருந்தார்.
Post a Comment