டாப்சி முழுக்க முழுக்க பாலிவுட் நடிகையாகவே மாறிவிட்டார் . நான் சபானா படத்திற்கு பிறகு ஆக்சன் படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார். அந்த வகையில், தற்போது பாட்லா என்றொரு ஹிந்தி படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் டாப்சி. சுஜாய் கோஷ் இயக்கும் இந்த திரில்லர் படத்தில் அமிதாப்பச்சனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்தது சிறந்த அனுபவம் என்று கூறியுள்ள டாப்சி,
அவரது காட்சிகள் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இருவரும் ஏற்கனவே பிங்க் என்ற படத்தில் நடித்திருக்கின்றனர்.
Post a Comment