இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லி விமான நிலையத்தில் கைகுலுக்கி வரவேற்றார்.
இன்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் விளாடிமிர் புடின் மற்றும் பிரதமர் மோடி இருவரும் சந்தித்து பேசினர். இரு நாட்டு உறவுகளை குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இச்சந்திப்பின்போது இருநாடுகளுக்கிடையே பல ஒப்பந்தங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அதில் குறிப்பாக ரஷ்யாவின் அதிநவீன எதிர்ப்பு ஏவுகணையான எஸ்-400 விமானம் வாங்கும் ஒப்பந்தம் இன்று அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி கையெழுத்தானது.

Post a Comment