இன்று காலை பொலிஸ் திட்டமிட்ட குற்ற பிரிவினால் கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு கோட்டை நீதவான் அரங்க திஸாநாயக்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை ரூபா 5 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை திட்டமிட்ட குற்றப் பிரிவில் முன்னிலையாகியிருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கடந்த ஜூலை 02 ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் விடுதலைப்புலிகள் காலத்தில் இடம்பெறவில்லை என்றும், பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாயின் விடுதலைப்புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற கருத்துப்படவும் உரையாற்றியிருந்தார்.
இந்த உரைக்கு தென் பகுதியில் பல சர்ச்சைகள், எதிர்ப்புகள் கிளம்பியதால், கடந்த ஜூலை 05 ஆம் திகதி தனது அமைச்சுப் பதவியை அவர் இராஜினாமா செய்திருந்தார் என்பது இங்கு குறிப்படத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment