Ads (728x90)

சீஷெல்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  நேற்று (08) பிற்பகல் சீஷெல்ஸ் தேசிய வைத்தியசாலையை பார்வையிட்டார்.

சீஷெல்ஸுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் சீஷெல்ஸ் நாட்டிற்கு இரண்டு நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதியுடன் மேலும் 18 பேர் கொண்ட குழுவினர் இவ்விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

சீஷெல்ஸ் தேசிய வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்களும், மருந்துப்பொருட்களும் ஜனாதிபதியால் அன்பளிப்பு செய்யப்பட்டதோடு, இலங்கை வைத்தியசாலையின் சீஷெல்ஸ் நாட்டுக்கான புதிய கிளையும் இன்று ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget