Ads (728x90)

யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை இலக்கு வைத்து வீதிச் சோதனை மற்றும் திடீர் சுற்றி வளைப்புக்களை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். யாழ். நகர்பகுதி மற்றும்  கொக்குவில், திருநெல்வேலி பகுதிகளிலேயே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

வாள்வெட்டு குழுக்களுடன் தொடர்புடைய முக்கிய வன்முறையாளர்களை இலக்கு வைத்து கடந்த வாரம் திடீர் சுற்றிவளைப்பினை கொக்குவில் பகுதியில் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். இதனை அடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திடீர் சோதனை இடம் பெறுகின்றது.

நகர் பகுதியில் இருந்து செல்லும் காங்கேசந்துறை வீதி, பலாலி வீதி, மற்றும் மானிப்பாய் வீதி ஆகியவற்றில் 500 மீற்றர் இடைவெளியில் வீதி தடைகள் போடப்பட்டு ஒவ்வொரு இடங்களிலும் 20 இற்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டு சோதனையிடப்படுகின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget