Ads (728x90)

வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.  கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கூட்டத்தில் இந்த அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டிருந்தார்.

மாவட்ட அமைப்பாளர்களுக்குப் பதிலாக, மாவட்ட முகாமையாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார். இந்த முடிவுக்கு மாவட்ட அமைப்பாளர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது என்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பியதாச தெரிவித்தார்.

எனினும் திங்கட்கிழமை நடந்த கூட்டத்துக்கும், கட்சித் தலைமையகத்தை மூடும் முடிவுக்கும் தொடர்பில்லை என்றும், கட்சி தலைமையகத்தில் பணியாற்றுவோருக்கு விடுமுறை அளிப்பதாகவே சிறிலங்கா அதிபர் இந்த முடிவை எடுத்தார் என்றும், எதிர்வரும் 30ஆம் நாள் வரை கட்சித் தலைமையகம் மூடப்படடிருக்கும் எனவும் சுதந்திரக் கட்சி செயலர் பியதாச தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget