போதையின் பிடியிலிருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்காக போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதன் பின்னரான கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் பற்றிய தேடுதல் நடவடிக்கைகள் மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நவம்பர் முதலாம் திகதி முதல் இன்று வரையான சுமார் இரண்டு மாத காலப்பகுதியில் 280 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸ் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த இரண்டு மாத காலத்திற்குள் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 15530 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதையின் பிடியிலிருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டலில் விரிவான வேலைத்திட்டங்கள் பலவும் தற்போது நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, அச்செயற்திட்டங்கள் ஜனாதிபதியினால் தொடர்ச்சியாக மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment