Ads (728x90)

புத்தகங்களில் அறிந்து கொள்ள முடியாத விடயத்தை கடந்த ஐம்பது நாட்களில் அனுபவம் மூலமாக மக்கள் உணர்ந்து விட்டனர். நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் இறுதி சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதனை அனைவரும் இணைந்து நீக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் நேற்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக் கொண்டு கடந்த சில நாட்களாக நிறைவேற்று அதிகாரி எவ்வாறு செயற்பட்டார். மக்கள் ஆணையை எவ்வாறு எட்டியுதைத்து தன்னிச்சையாக செயற்பட்டார் என அவதானிக்க முடிந்தது.  கடந்த சில நாட்களாக அவர் நடந்து கொண்ட விதம் எவ்வாறு என்பததை அறிய முடிந்தது. கடந்த 50 நாட்களாக நாட்டின் ஜனநாயகத்திற்கும், மக்கள் ஆணைக்கும் அமைய ஜனாதிபதி செயட்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இனியும் நிறைவேற்று அதிகாரம் அவசியமாக என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்டு வரப்பட்டபோது "இந்த ஆசனத்தில் பைத்தியக்காரன் அமர்ந்தால் என்ன ஆகும் "என என்.எம்.பெரேரா ஒருமுறை கேட்டாராம்.  ஆனால் அப்போது எம்மால் அதனை உணர முடியவில்லை. ஆனால் இன்று மைத்திரிபால சிறிசேன அதனை நிரூபித்து விட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மஹிந்த ராஜபக்ஷவை தாக்கியுள்ளார். இப்போதாவது இவற்றை அனைவரும் விளங்கிக் கொள்ளுங்கள். 20ஆம் திருத்தத்தில் மாற்றுத் திருத்தங்கள் எதனையும் செய்ய வேண்டும் என்றால் அதனை செய்வோம். வாக்கியங்களில் குறைகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்வோம். ஆனால் நிறைவேற்று முறைமையினை தொடர்ந்தும் தக்க வைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget