Ads (728x90)

மஹிந்த ராஜபக்ச இன்று தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். பின்னர் கருத்துத் தெரிவிக்கையில், பொதுத் தேர்தல் ஒன்று இல்லாமல் பிரதமர் பதவியில் இருக்கும் தேவை தனக்கில்லை என்று  கூறியுள்ளார்.

ஜனாதிபதி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாகவே தான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். தனது பதவி விலகல் குறித்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள விஷேட அறிக்கை மூலம் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற  உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் மக்களுக்குப் பொதுத் தேர்தல் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதே எமது இலக்காக இருந்தது.

பொதுத் தேர்தல் ஒன்று நடாத்தப்படாத சூழ்நிலையில் நான் பிரதமர் பதவியை வகிப்பதில் அர்த்தமில்லை. நீதிமன்றின் நீண்ட தீர்ப்பை நான் வாசித்தேன் அதனை மதித்து செயற்பட வேண்டும்.

பாராளுமன்றில் வெறுமனே 103 ஆசனங்களை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பணயக் கைதியாக வைத்து இயக்கிக் கொண்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் ரிமோட் கன்ட்ரோல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமே உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு ஐ.தே.க மறுப்பு தெரிவிக்குமாயின் பாராளுமன்றில் ஐ.தே.க பெரும்பான்மையை இழக்க நேரிடும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget