Ads (728x90)

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பாதையில் நாட்டிற்கு கடந்த 03 நாட்களில் 100 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டமான அதுகல்புர நுழைவு திறக்கப்பட்ட முதல் மூன்று நாட்களில் மீரிகமவிலிருந்து குருநாகல் வரை 50,000 வாகனங்கள் பயணித்துள்ளதாகவும், இதன் மூலம் ரூபா 100 லட்சம் வருமானமாக கிடைத்துள்ளது.

15-01-2022 சனிக்கிழமை மீரிகமவில் இருந்து குருநாகல் வரையான பகுதி திறக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல் 12 மணித்தியாலங்களுக்கு இலவசமாக பயணிக்கும் வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை 16-01-2022 மதியம் 12.00 மணிக்கு பிறகு அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நெடுஞ்சாலையில் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 17-01-2022 திங்கட்கிழமை நள்ளிரவு வரை 23,039 வாகனங்கள் பயணித்தாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget