பிற்பகல் 2.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரை குறித்த மின் தடை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு 1,800 மெட்ரிக் தொன் டீசல் கிடைத்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஒரு மின்பிறப்பாக்கி செயற்படஆரம்பித்துள்ளதாகவும், அதனூடாக தேசிய கட்டமைப்பிற்கு 115 மெகாவாட் மின்சாரம் இணைக்கப்படவுள்ளதாகவும் மின்சார சபையின் மேலதிக பொதுமுகாமையாளர் அன்றூ நவமணி கதெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment