இந்தவகையில் சீனா 10 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு இலவசமாக வழங்க தயாராகவுள்ளது. இந்த அரிசியின் சந்தைப் பெறுமதி சுமார் 600 மில்லியன் டொலராக அமையும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யு.ஏ.விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
எதுவும் இலவசமாக கிடைக்காத காலத்தில் இது நன்கொடையாளர் ஒருவரிடம் இருந்து பெறக்கூடிய ஒரு சிறந்த பரிசு என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் அதிகமானவை இந்தியாவின் தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் மொத்தமாக இரண்டு சதவீதமே சேதனப் பசளை மூலம் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சையரிசி 160 ரூபாவிற்கும் 190 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்கப்படுகிறது.
உள்நாட்டு அரிசியின் விலை அதிகரித்துள்ளதாலும், வௌிநாட்டு அரிசி சுமார் 50 ரூபா வரை குறைவாக கிடைப்பதாலும் மக்கள் வௌிநாட்டு அரிசியை வாங்கிச் செல்வதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment