Ads (728x90)

எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையில் ஒவ்வொரு  எரிவாயு சிலிண்டருக்கும் 10 இலட்சம் ரூபாய் காப்புறுதி செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி ஏதும் வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டால்  1311 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறு லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவர் திசார ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின்  மேற்பார்வையுடனே  எரிவாயு  சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களில் நூற்றுக்கணக்கான எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின. இந்நிலையிலேயே சகல எரிவாயு சிலிண்டர்களும் 10 இலட்சம் ரூபாவிற்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 



Post a Comment

Recent News

Recent Posts Widget