Ads (728x90)

ஒமிக்ரோன் அறிகுறிகள் ஏற்பட்டு ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் பெரும்பாலான மக்கள்  குணமடைந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் அவசியம் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது.

தனிமைப்படுத்தல் கால அளவு குறித்து நாடுகள் தங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொரோனா தொற்று முகாமைத்துவ குழு சேர்ந்த அப்டி மொஹமட்  தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவலின் படி கடந்த டிசம்பர் 02 ஆம் திகதி சுமார் 128 நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று பரவியுள்ளது.

ஓமிக்ரோன் மாறுபாடு நுரையீரலை விட மேல் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது என்பதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது ஒரு நல்ல செய்தி. அதிக ஆபத்துள்ள நபர்கள் மற்றும் தடுப்பூசி போடாதவர்கள் அந்த மாறுபாட்டிலிருந்து இன்னும் மோசமாக நோய்வாய்ப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த நோய்த்தொற்று உள்ள நாடுகளில் நீண்ட தனிமைப்படுத்தல் காலம்  தொற்றாளர்களின் எண்ணிக்கையை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்புளூவன்ஸா மற்றும் கொரோனா வைரஸ் ஆகிய இரண்டும் வெவ்வேறு வழிகளில் உடலைத் தாக்கும் தனித்தனி வைரஸ்கள் என்பதால் அவை புதிய வைரஸாக ஒன்றிணைவதில்  சிறிய ஆபத்தும் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.





Post a Comment

Recent News

Recent Posts Widget