Ads (728x90)

ஆரியகுளம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்டது தான் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு வடக்கு ஆளுநர், மாநகர ஆணையாளரைப் பணித்துள்ளார்.

அத்துடன் மத நிகழ்வுகளிற்கு அனுமதி பெற வேண்டுமென்ற யாழ். மாநகர சபையின் தீர்மானத்தை திரும்பப் பெறுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

மதத்தைத் தடை செய்தால் அல்லது குடிமக்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதைத் தடுத்தால் அல்லது மத வெறுப்பைத் தூண்டுவதற்கு ஏதேனும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அவர்கள் அரசியலமைப்பை மீறுவார்கள். 

மதத்தை அணுகுவதைத் தடுக்கும் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை திரும்பப் பெறாவிட்டால் ஆளுனர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பார் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சமயத்தைப் பின்பற்றும் உரிமை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்களுக்கு மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் தன்னைச் சந்திப்பதற்கு ஆலோசனை வழங்குமாறும் அந்தக் கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டுளர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget