Ads (728x90)

கால் நடைகளுக்கு போதிய தீவனம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் உள்நாட்டு பசும் பால் உற்பத்தி நூற்றுக்கு 20 சதவீதம் குறைந்துள்ளது என்றும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

கால்நடைகளின் தீவனத்துக்காக மக்காச்சோளத்தை இறக்குமதி செய்யத் தேவையான டொலர் தட்டுப்பாடு காரணமாகக் கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமைக்கு மத்தியில் கால்நடைகளுக்கு மக்காச்சோளத்துக்குப் பதிலாக மக்காச்சோள மரங்களை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக் கப்பட்டுள்ளதாகத் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

உரத்தட்டுப்பாடு காரணமாக பல பிரதேசங்களில் மக்காச்சோளத் தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  பாதிக்கப்பட்ட செடிகள் விலைக்குக் கொள்வனவு செய்யப்பட்டு கால்நடைகளுக்கு வழங்கப்படுவதாகவும் சபை தெரிவித்துள்ளது.

கால்நடை தீவனத்துக்கு மக்காச் சோளத்தைக் கொள்முதல் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவற்றை விலை கொடுத்து கொள்வனவு செய்ய இதுவரை டொலர் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget