இது தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது,
அரசாங்கம் கடந்த வாரம் எரிபொருட்களின் விலை அதிகரித்திருந்தது. அதன் பிரகாரம் எமக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாங்கள் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்திடம் கேட்டிருந்தோம்.
ஆனால் இது தொடர்பாக அரசாங்கம் சார்பாக யாரும் இதுவரை எம்மை அழைத்து பேசவில்லை. பாடசாலைகள் விடுமுறை முடிந்து நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன. அதனால் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை அதிகரிப்பதை தவிர எமக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment