Ads (728x90)

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த கட்டுவன் - மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் வீதி விடுவிக்கப்பட்டுள்ளது. 

கட்டுவன் - மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் வீதி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதியுடன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் நடாத்திய பேச்சுவார்தையை தொடர்ந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் கட்டுவன் - மயிலிட்டி வீதியின் விடுவிக்கப்படாமல் இருந்த 400 மீற்றர் வீதி விடுவிக்கப்பட்டுள்ளது. 

விடுவிக்கப்படும் 400 மீற்றர் நீளமான வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த 400 மீற்றர் வீதியானது புனரமைக்கப்பட்டு விமான நிலையத்துக்கு தற்போது செல்வதற்காக பாவிக்கப்படும் காப்பெற் வீதியுடன் இணைக்கப்படவுள்ளது. 



Post a Comment

Recent News

Recent Posts Widget