Ads (728x90)

வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சுக்களின் செயலாளர்கள் நால்வருக்கு நேற்று முதல் அமுலிற்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம், உள்ளூராட்சி, பேரவை மற்றும் ஆளுநர் செயலக செயலாளர்களுக்கே வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா அவர்களினால்  இந்த இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தற்போதைய உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவும், தற்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தனன் பேரவைச் செயலகச் செயலாளராகவும், ஆளுநர் செயலக செயலாளர் திருமதி.சரஸ்வதி மேகநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராகவும், தற்போதைய கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  பேரவைச் செயலகத்தின் செயலாளர் எஸ்.குகநாதன் நிர்வாக பிரிவின் பிரதிப் பிரதம  செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.





Post a Comment

Recent News

Recent Posts Widget